சுவையான கடலை மாவு பஜ்ஜி செய்வது எப்படி?

சுவையான கடலை மாவு பஜ்ஜி செய்வது எப்படி?

நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீருடன் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளோம். அதற்காக நாம் கடைகளில் பஜ்ஜி, வடை போன்ற உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. அவற்றை நாம் வீட்டிலேயே வாங்கி சாப்பிடுவது நல்லது.

தற்போது இந்த பதிவில், சுவையான கடலை மாவு பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கடலை மாவு – கால் கிலோ
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • கேசரி பவுடர் – 2 சிட்டிகை
  • வாழைக்காய் – 2
  • அரிசி மாவு – 2 டீஸ்பூன்
  • பெருங்காயம் – 3 சிட்டிகை
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் வாழைக்காயை சீவி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கடலை மாவில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து  கரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், சீவிய வாழைக்காயை, கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் போட்டு வேகா விட வேண்டும். பஜ்ஜி சிவந்தவுடன் எடுத்து விட வேண்டும். இப்பொது சுவையான கடலை மாவு பஜ்ஜி தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube