சுவையான பொட்டுக்கடலை குழம்பு வைப்பது எப்படி?

நம்மில் அதிகமானோர் தினமும் விதவிதமான குழம்புகளை வைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது

By leena | Published: Mar 05, 2020 01:04 PM

நம்மில் அதிகமானோர் தினமும் விதவிதமான குழம்புகளை வைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பொட்டுக்கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பொட்டுகடலை 5 மேசைக்கரண்டி
  • தக்காளி 1
  • வெங்காயம் 1
  • பச்சை மிளகாய் 3
  • கொத்தமல்லி சிறிதளவு

தாளிக்க

  • எண்ணெய்
  • கடுகு
  • உளுத்தம் பருப்பு
  • கடலைப் பருப்பு

செய்முறை

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவேண்டும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நன்கு சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு பொரிய விட வேண்டும். பிறகு பச்சை மிளகாயை போட்டு 2 நிமிடம் வதக்கி வெங்காயத்தை சேர்த்து வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கி தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவேண்டும். தண்ணீர் ஓரளவு சுண்ட தொடங்கும்போது, பாத்திரத்தை இறக்கி வைத்து பொடித்து வைத்த பொட்டுக்கடலை மெதுவாக தூவி கட்டி இல்லாமல் கலக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி தூவிப் பரிமாற வேண்டும். இப்போது சுவையான பொட்டுக்கடலை குழம்பு தயார்.
Step2: Place in ads Display sections

unicc