சுவையான கொண்டைக் கடலை சுண்டல் செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல விழாக்களை கொண்டாடுகின்றோம். அந்த வகையில், விழாக்கள் என்றாலே, நமது வீடுகளில் கண்டிப்பாக பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில் அசத்தலான கொண்டை கடலை சுண்டல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கொண்டைக்கடலை – கால் கிலோ
  • வெங்காயம் (நறுக்கியது) – 1
  • வத்தல் – 3
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கேற்ப
  • தேங்காய் துருவல் – சிறிதளவு

செய்முறை

முதலில் கொண்டைக்கடலை முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். பின் அடுத்த நாள் காலையில், ஊற வைத்த கடலையை கழுவி எடுத்து, அதனை பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து வேக விட வேண்டும். கடலை வெந்ததும் அதனை இறக்கி, தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், வத்தல், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இவை வதங்கிய பின் கடலையை போட்டு, கிளற வேண்டும். அதன் பின் அதனுடன், தேங்காய் துருவலை சேர்த்து கிளற வேண்டும். இப்பொது சுவையான கொண்டை கடலை சுண்டல் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.