சுவையான இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி? வாருங்கள் பாப்போம்!

இட்லி தான் நமது பாரம்பரியமான  உணவு. இது சுவையான ஒரு காலை உணவு மட்டுமல்லாமல், மிக சத்தான உணவும் கூட. ஆனால், இட்லியை எப்பொழுதும் சாம்பாரில் தொட்டு சாப்பிடுவதை விட வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். இதன் படி இன்று நாம் இன்ட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பாப்போம். 

தேவையான பொருள்கள் 

  • அவித்து வைத்த இட்லி 
  • கடலை மாவு அல்லது சோள மாவு 
  • சோயா சாஸ் 
  • சின்ன வெங்காயம் 
  • தக்காளி சாஸ் 
  • கொத்தமல்லி 
  • எண்ணெய் தேவையான அளவு  
  • உப்பு தேவையான அளவு 

செய்முறை 

அவித்து வைத்துள்ள இட்லியை துண்டு துண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு அந்த வெட்டி வைத்துள்ள இட்லியை எண்ணெயில் பொரித்து  எடுத்துக்கொள்ளவும். பின்பு சோள மாவை கரைத்து வைத்து கொள்ளவும். 

பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி வதக்கவும், அதனுடன் சோளமாவு கரைசல், சோயா சாஸ் , தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். 

பின்பு வெட்டி பொரித்து வைத்துள்ள இட்லியை அதனுள் போட்டு கிளறவும். தற்போது மிகவும் சுவையான இட்லி மஞ்சூரியன் தயார். நறுக்கிய கொத்தமல்லியை அதன் மீது தூவி பரிமாறவும். எண்ணெய் பிடிக்காதவர்கள் இட்லியை பொரிப்பதற்கு பதிலாய் வதக்கி கொள்ளலாம். 

author avatar
Rebekal