சுவையான முருங்கைக்காய் புளிக் குழம்பு செய்வது எப்படி?

நாம் முருங்கைக்காயை விதவிதமாக சமையல் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த

By leena | Published: Mar 09, 2020 01:32 PM

நாம் முருங்கைக்காயை விதவிதமாக சமையல் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான முருங்கைக்காய் புளிக்குழம்பு தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை 

 • சின்ன வெங்காயம் - 100 கிராம் 
 • முழு பூண்டு -1
 • தக்காளி - 3 
 • உருளை - 3 
 • முருங்கைக்காய் - 2 
 • புளி - தேவையான அளவு
 • மிளகாய்தூள் - 4 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
 • உப்பு - தேவையான அளவு

தாளிக்க 

 • வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
 • எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை 

முதலில் புளியை ஊற  வைத்து அதனுடன் தக்காளியை கரைத்து வைக்க வேண்டும். பின் வெங்காயத்தை  நறுக்கி வைக்க வேண்டும். உருளையை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் கடாயில் எண்ணெய் விட்டு  வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, முருங்கை, உருளை எல்லாவற்றையும் சேர்க்க வேண்டும்.

பின்  கிளறி விட்டு மிளகாய் தூள் காரம் போகும் வரை  கொதிக்க விட வேண்டும். குழம்பில் எண்ணெய் தனியாக பிரிந்து வந்ததும், குழம்பை இறக்கி விட வேண்டும்.  

Step2: Place in ads Display sections

unicc