சுவையான இனிப்பு பொங்கல் செய்வது எப்படி?

நாம் கொண்டாடுகின்ற அதிகமான விழாக்களில் பொங்கல் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது.

By leena | Published: Aug 28, 2019 12:22 PM

நாம் கொண்டாடுகின்ற அதிகமான விழாக்களில் பொங்கல் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. பொங்கல் அன்று மட்டுமல்லாது, மற்ற விழாக்களின் போதும் கூட பொங்கல் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில், சுவையான இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பச்சரிசி - 1/2 கிலோ
  • பாசிப்பருப்பு - 200 கிராம்
  • வெல்லம் - 1 கிலோ
  • பால் - 1/2 லிட்டர்
  • நெய் - 100 கிராம்
  • முந்திரி - 100
  • சுக்கு - சிறிது
  • ஏலக்காய் - 10
  • தேங்காய் - 1

செய்முறை

முதலில் அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி, பாசிப்பருப்பை வாணலியில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பால் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பால் பொங்கி வரும்போது, அரிசியை போட்டு நன்கு வேக விட வேண்டும். அரிசி அரை பதத்திற்கு வெந்த உடன், அதனுடன் பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும். அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும், அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளார்க் கொண்டே இருக்க வேண்டும். பின் வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து கிளற வேண்டும். பின் ஏலக்காய், சுக்கு பவுடரை சேர்த்து கிளறி, அடுப்பில் இருந்து இறக்கும் போது, நெய் சேர்த்து இறக்க வேண்டும். இப்போது சுவையான இனிப்பு பொங்கல் தயார்.  
Step2: Place in ads Display sections

unicc