சுவையான மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி?

சுவையான மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி?

நாம் நமது வீடுகளில் மாலை நேரங்களில், தேநீருடன் சேர்த்து பல வகையான சிற்றுண்டிகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பஜ்ஜி மிளகாய் – 10
  • கடலை மாவு – 1 கப்
  • போட கலர் ஆரஞ்ச் – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கு
  • சோடா உப்பு – ஒரு பின்ச்
  • நிலக்கடலை – ஒரு கப்
  • உப்பு – சிறிதளவு
  • பூண்டு – 1
  • வர மிளகாய் – 5

செய்முறை

முதலில் பஜ்ஜி செய்ய தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் நிலக்கடலையை வருது தோலுரித்து மிளகாய், பூண்டோடு சேர்த்து போடி செய்து கொள்ள வேண்டும்.

பின் கடலை மாவில் உப்பு, புட் கலர் சேர்த்து இட்டலி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் கலந்து வைக்க வேண்டும். மிளகாயில் ஒரு பக்கம் நீளமாக கீறி உள்ளே உள்ள விதைகளை நீக்கி ஒரு தேக்கரண்டி நிலக்கடலை பொடியை வைக்க வேண்டும்.

பின் மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான மிளகாய் பஜ்ஜி தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube