சுவையான காலிப்ளவர் கிரேவி செய்வது எப்படி?

நாம் காலிபிளவரை ஒவ்வொரு விதமாக  சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான

By leena | Published: Mar 10, 2020 01:39 PM

நாம் காலிபிளவரை ஒவ்வொரு விதமாக  சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான காலிப்ளவர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை 

 • காலிப்ளவர் - சிறியது 
 • பட்டாணி - 1 கப் 
 • தக்காளி - 2 
 • பெரிய வெங்காயம் - 1 
 • பச்சை மிளகாய் - 5
 • கரம்  மசாலா,தனியா தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு 
 • தயிர் - ஒரு கப் 
 • பச்சை மிளகாய் - 6 
 • சீரகம் - சிறிதளவு  
 • மிளகு - சிறிதளவு 
 • பட்டை - 1 
 • கிராம்பு - 3 
 • இஞ்சி - சிறுத் துண்டு 
 • பூண்டு  - 5 

செய்முறை

முதலில் அரைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் சிறிதளவு ஊற்றி, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து, நன்கு கிளற வேண்டும். அதன் பின் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும். 

பின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதனுள் காலிபிளவர், பட்டாணி சேர்த்து, பத்து  கழித்து தயிர் சேர்த்து இறக்க வேண்டும். காலிபிளவர் வெந்தவுடன் இறக்க வேண்டும். இப்பொது சுவையான காலிப்ளவர் கிரேவி  தயார்.

Step2: Place in ads Display sections

unicc