சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பக்கோடாவை விரும்பி சாப்பிடுவதுண்டு.  நாம் அதிகமாக பக்கோடாவை மாலையில் அல்லது காலையில் தேநீருடன் சாப்பிடுவதை தான் விரும்புவதுண்டு.

தற்போது இந்த பதிவில், சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • வெண்டைக்காய் – 200 கிராம்
  • வெங்காயம் – ஒன்று
  • கடலைமாவு – ஒருகப்
  • கார்ன்ப்ளர் – அரை கப்
  • முந்திரிப்பருப்பு – 10
  • மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
  • தனியாதூள் – ஒரு தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வெண்டைக்காயை ஒரு அங்குல நீளத்திற்கு விருப்பம் போல வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில், வெண்டைக்காயுடன் நறுக்கிய வெங்காயம், முந்திரிப்பருப்பு, உப்பு, மிளகாய்தூள், தனியாத்தூள் சேர்த்து முதலில் நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு கடலை மாவு மற்றும்  சோளமாவு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசறி கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்திருக்கும் வெண்டைக்காயை சிறிது சிறிதாக போட்டு நன்கு சிவக்க பொறித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான வெண்டைக்காய் பக்கோடா தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.