குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவு உருண்டை செய்வது எப்படி?

நாம் அனைவரும் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

By leena | Published: Jul 15, 2019 05:07 PM

நாம் அனைவரும் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இந்த தேநீரை நாம் வெறுமையாக அருந்துவதில்லை. அதனுடன் ஏதாவது ஒரு உணவுப்பொருளை சேர்த்து அருந்துகிறோம். தற்போது இந்த பதில் சுவையான மாவுருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பொட்டுக்கடலை - கால் கிலோ
  • சர்க்கரை - கால் கிலோ
  • ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
  • முந்திரி - 15
  • திராட்சை - 15
  • நெய் - அரைக்கப்

செய்முறை

முதலில் ஏலக்காய் மற்றும் சர்க்காரை இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பொட்டுக்கடலை, சர்க்கரை இரண்டையும் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அரைத்த மாவுடன் முந்திரி, திராட்சை, ஏலக்காய்தூள் சேர்த்து, நெய்யாய் சூடாக்கி, மாவில் கொட்டி நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இப்போது சுவையான பொரிகடலை மாவு உருண்டை தயார்.
Step2: Place in ads Display sections

unicc