கேரட்டை பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி.?

கேரட்டை பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி.?

கேரட் பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும் வழிமுறைகள் :

தலை முடி உதிர்வது அனைவரிடமும் உள்ள ஒரு பெரிய பிரச்சனையாகவே கருதப்படுகிறது.இது தலையில் உள்ள ஹார்மோன் சுரப்பி நின்றுபோவதால் ஏற்படுகிறது.இதனால் இன்றைய கால இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முக்கிய பிரச்சனையாகவே இருக்கிறது.

முடி உதிர்வதற்காக இன்று பலரும் மருத்துவர்களிடம் சென்று அதிக பணம் செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றன.நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேரட்டை பயன்படுத்தி கூந்தல் பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை பற்றி பின்வருமாறு காணலாம்.

தேவையான பொருள் :

  • ஒரு கேரட்
  • அரை அவகோடா பழம்

செய்முறை :

  • கேரட்டையும் அவகோடா பழத்தையும் எடுத்து கொண்டு அதை நன்கு அரைத்து பொடியாக்கி வைத்து கொள்ளவும்.அந்த பொடியை நீரில் கலக்கி குளுகுளு பேஸ்ட் போல செய்து கொள்ளவும்.
  • பின்னர் அந்த பேஸ்ட்டை எடுத்து உச்சந்தலையில் நன்கு தடவவும்.உச்சந்தலையில் எல்லா பகுதியிலும் நன்கு படரும் படி தடவவும்,பின்னர் அரை மணி நேரம் கழித்து சீயக்காய் கொண்டு தலையை நன்கு கழுவவும்.
  • இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் முடி உதிர்வதில் இருந்து முற்றிலும் விடுபெறலாம்.
Join our channel google news Youtube