திருமணம் நிச்சயிமாகிவிட்டதா? தலைமுடியின் நீளம் குறைவாக உள்ளதே என்ற கவலையா?

திருமணம் நிச்சயிமாகிவிட்டதா? தலைமுடியின் நீளம் குறைவாக உள்ளதே என்ற கவலையா?

பெண்களில் பலருக்கு உடலில் ஏற்படும் பலவித மாற்றங்கள் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றால் தலைமுடி உதிர்தல், உடைதல், வளர்ச்சியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அதிலும் திருமண வயதில் இருக்கும் அல்லது திருமணம் நிச்சியிக்கப்பட்ட பெண்களின் தலைமுடி அடர்த்தி குறைந்து, அதிகம் உதிர்ந்து, உடைந்து காணப்படும் நிலை ஏற்பட்டால் மணக்கோலம் பாழாகும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே இந்த பிரச்சனையை தடுக்க மிகக்குறுகிய காலத்தில் பதிப்பில் கூறப்பட்டிருக்கும் செய்முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் கட்டாயம் முடிப்பிரச்சனை தீர்ந்து நல்ல பலன் கிடைக்கும். வாருங்கள், கூந்தலின் வளர்ச்சியை நல்கும் வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

என்ன எண்ணெய்?

தலைக்கு எந்த வகையான, என்ன எண்ணெய் தடவுகிறோம் என்பது மிகவும் முக்கியம். தலைமுடியின் வகைக்கு ஏற்ற, கூந்தலின் பிரச்சனையைப் போக்க உதவும் வகையிலான எண்ணெயை தேர்ந்தெடுத்து, தினமும் இரவு தூங்கச் செல்லுமுன் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

குறைந்தது 20-20 நிமிடங்கள் இந்த எண்ணெய் மசாஜை செய்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடி வளர்ச்சி தூண்டப்படும்

வேதிப்பொருட்களில்லா ஷாம்பூ

தலைமுடியின் வகைக்கு ஏற்ற, அதன் பிரச்சனையைப் போக்கி, வளர்ச்சியை தூண்டக்கூடிய வேதிப்பொருட்கள் இல்லாத  ஷாம்பூவை தேர்ந்தெடுத்து கூந்தலுக்கு உபயோகித்தல் அவசியம்.

தினமும் தலைக்கு குளிக்கலாமா?

தினமும் தலைக்கு குளிப்பதால் தலையில், தலைமுடியின் வேர்க்கால்களில் வறட்சி ஏற்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆகவே தினமும் தலைக்கு குளிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

கண்டிஷனர்.!

செயற்கை முறையில் தயரிக்கப்பட்ட கண்டிஷனர் மற்றும் ஜெல் வகையிலான பொருட்களை தலைக்கும், முடிக்கும் பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துதல் வேண்டும்.

அதிக வெப்பம்..!

தலைமுடியை ஸ்டைல் செய்கிறேன், ஸ்டெரைட் செய்கிறேன் என்ற பெயரில் முடிக்கு கண்ட பொருட்களை பயன்படுத்துவது, முடியை காயவைக்க டிரையரை பயன்படுத்துவது முதலியவற்றை தவிர்த்தல் நல்லது.

இது போன்ற சரியான நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றி வந்தால், தலைமுடி வளர்ச்சியில் எந்த பிரச்சனைகளும் இருக்காது.

author avatar
Soundarya
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *