ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்தலாம் !

இன்றைய காலகட்டத்தில் ஆண் மற்றும் பெண்கள் என இருபாலரும் முடி உதிர்வு பிரச்சனை இருந்து வருகிறது.அதிகளவு தண்ணீர் நாம் தினமும் குடித்து வருவது கூந்தலுக்கு நல்லது.
இந்நிலையில் இந்த பதிப்பில் ஆலிவ் எண்ணையை பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை தூண்டுவது எப்படி என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு மனஅழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை மசாஜ் :


 
ஆலிவ் எண்ணெயுடன் முட்டை சேர்த்து  நன்கு கலக்கி ஸ்கால்ப்பில் தேய்த்து நன்கு பூசிமசாஜ் செய்ய வேண்டும். பின்பு குளித்து விட வேண்டும். இது கூந்தலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் :


ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்கு கலந்து இரவில் தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து காலையில் குளித்து வர இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.

ஆலிவ் எண்ணெய் மற்றும் பூண்டு :


ஆலிவ் எண்ணெய்யில்  பூண்டை அரைத்து சேர்த்து நன்கு கலந்து தலைக்கு தேய்த்து அரைமணிநேரம் கழித்து குளித்து வருவது மிகவும் நல்லது. பூண்டில் ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி பங்கல் தன்மை இருப்பதால் இது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.