உயிரை கொல்லும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உயிரை கொல்லும் என அறிந்தும் அனைவரும் பின்பற்றும்

By soundarya | Published: Apr 11, 2019 04:41 PM

இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உயிரை கொல்லும் என அறிந்தும் அனைவரும் பின்பற்றும் ஒரு பழக்கம், புகைப்பழக்கமாகும். தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் புகை, மது போன்ற பலதரப்பட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்; இந்த இளைய தலைமுறையினர் தான் நாளைய தலைவர்கள். புவியில் காணப்படும் முக்கிய போதை பழக்கங்களில் ஒன்றான புகை பிடிக்கும் பழக்கம், மிகவும் மோசமானது; இந்த புகை பழக்கம் தன்னையும் கொன்று, உடன் இருப்பவரையும் கொல்ல வல்லது. அப்படிப்பட்ட மோசமான, உயிரை கொல்லும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். சமூகத்தில் இணையுங்கள்! புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் பொழுது எல்லாம், உங்களுக்கு உதவும், வழிகாட்டும் நண்பர்கள், குடும்ப நபர்கள், நலம் விரும்பிகள், உற்றார் மற்றும் உறவுகளுடன் நேரம் செலவழிக்க முயலுங்கள்; அவ்வாறு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி உங்கள் மனதை திசை திருப்ப முயலும். முடிந்த வரை தனிமையில் இருப்பதை தவிர்த்து, மக்களுடன் கலந்து இருக்க, பழக முயலுங்கள்; உங்களுக்கு புகை பிடிக்கும் உணர்வு தோன்றுகையில், அதை பற்றி வெளிப்படையாக பேசி அந்த உணர்வை மாற்ற முயலுங்கள். குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் இடம்பெறும் சூழலை உருவாக்குங்கள்; வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களிடம் செல்லுகையில் அல்லது அவர்களை தூக்கி கொஞ்சுவதற்கு நாம் சுத்தமாக - தூய்மையானவராக இருக்க வேண்டியது அவசியம். அல்லது குழந்தைகள் இருக்கும் பகுதியை தினசரி பார்வையிடுங்கள்; இந்த பயிற்சி மூலம் உங்களின் புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம். அழுத்தம் மனஅழுத்தம், வருத்தம் போன்ற உணர்வுகள் உங்களை விட்டு தூரம் இருக்கும் வகையில், வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை, செயல்பாடுகளை மாற்றி அமைக்க முயலுங்கள். உடலில் ஏற்படும் அழுத்த உணர்வை போக்குவதற்காகவே, பெரும்பாலான நபர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாடுவது உண்டு; ஆகையால், வாழ்க்கையை மகிழ்ச்சியாக மேற்கொள்ள என்னென்ன வழிவகைகள் உண்டோ, அவற்றை மேற்கொண்டு மகிழ்ச்சியாக வாழ முயலுங்கள். உடற்பயிற்சி உடலின் ஆரோக்கியம் மற்றும் மனதின் ஆரோக்கியம் ஆகிய இரண்டிற்குமே உடற்பயிற்சி என்பது அவசியம் ஆகும்; ஆகையால், தினசரி உடற்பயிற்சி செய்ய முயலுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்ய முயல்வது மனதில் தேவையற்ற எண்ணங்களை போக்கி, ஒரு குறிப்பிட்ட செயல் மீது கவனம் செலுத்த உதவும். மேலும் உங்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். நேர நிர்வாகம் உங்களது நேரத்தை சரியாக நிர்வகிக்க முயல்தல் அவசியம் ஆகும்; நீங்கள் உங்களது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் சரியாக, திட்டமிட்டு வாழ்ந்து வந்தால், சோம்பேறியாக இருக்கும் நேரம் குறையும். இதனால் மனதில் தேவையற்ற எண்ணங்கள் எழுவது குறையும்; மேலும் தேவையற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதும் குறையும். புத்தகங்கள் புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் என்று கூறுவர்; ஓய்வாக இருக்கும் நேரங்களில் மனதை திசை திருப்ப தரமான, மனதிற்கு அமைதி தரும், அறிவை விரிவு படுத்தும் புத்தகங்களை படிக்க முயலுங்கள். இவ்வாறு புத்தகங்கள் படிப்பது, மனதில் அவசியமற்ற எண்ணங்கள் எழுவதையும், அவசியமற்ற செயல்கள் செய்வதையும் தவிர்க்க உதவும்.
Step2: Place in ads Display sections

unicc