கண்களை சுற்றி ஏற்படும் பை போன்ற சுருக்கங்களை போக்குவது எப்படி?

கண்களை சுற்றி ஏற்படும் பை போன்ற சுருக்கங்களை போக்குவது எப்படி?

ஆண்கள் மற்றும் பெண்கள் என யாராக இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுவது போல, பை போன்ற சுருக்கங்களும் ஏற்படும். நம்மில் பலர் இந்த பிரச்சனையை சந்தித்து வருவதுண்டு; இவ்வாறு கண்களுக்கு கீழே ஏற்படும் பை போன்ற சுருக்கங்கள், நம்மை வயதானவர் போல தோன்றச்செய்யும்.

இந்த பதிப்பில், கண்களை சுற்றி ஏற்படும் பை போன்ற சுருக்கங்களை போக்குவது எப்படி என்பது குறித்து படித்து அறியலாம்.

தூக்கம்

ஒவ்வொருவரும் தினமும் குறைந்தபட்சம் 7 மணிநேரங்கள் உறங்க வேண்டும்; அவ்வாறு நம் உடலுக்கு போதிய அளவு உறக்கம் கிடைக்கவில்லை எனில், உடல் அதிக களைப்படையும்.

உறக்கத்தின் பொழுது மட்டுமே ஓய்வு பெரும் கண்களுக்கு, போதிய ஓய்வு கிடைக்காத நிலையில், அவை களைப்படைவதால் ஏற்படும் மாற்றம் தான் இந்த கண்களை சுற்றி ஏற்படும் கண் பை சுருக்கங்கள்!

உப்பு

எந்த ஒரு சுவையையும் அளவாக சுவைத்து வந்தால், உடலை நோய் நொடிகள் அண்டாது; உப்புச்சுவை அதிகமுள்ள உணவுகளை உண்பவர்களுக்கு நிச்சயமாக பிற நோய்க்குறைபாடுகளுடன், கண்களை சுற்றி பை போன்ற சுருக்கங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மேக்கப்

பெண்கள் அதிகப்படியான மேக்கப் அணிவதனால், சில சரும குறைபாடுகள் ஏற்படலாம்; அவ்வாறு ஏற்படும் குறைபாடுகளில் கண் பை சுருக்கமும் ஒன்று. பெண்கள் அதிகப்படியான மேக்கப் அணிவதை தவிர்க்க வேண்டும்; மேலும் உறங்கும் முன் மேக்கப்பை சுத்தமாக களைந்து விட்டு பின் உறங்குதல் வேண்டும்.

மது! புகை!

மது, புகை போன்ற பழக்கங்கள் உடலின் ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியவை; ஆரோக்கியத்தோடு இந்த பழக்கங்கள் அழகு பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடியவை.

அதிக மது அருந்தும், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கண் பை சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்; ஆகையால் இந்த பழக்கங்களை முடிந்தவரை கட்டுக்குள் வைக்க அல்லது தவிர்க்க முயல்வது நல்லது.

கவனம்

இன்றைய நவீன யுகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், கண்களுக்கு கண்டிப்பாக அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது; அதிகப்படியான டிஜிட்டல் சாதனங்கள் உபயோகித்தால், கண் பார்வை குறைதல், கண் பை சுருக்கம், கருவளையம் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம். ஆகையால், அதிகமாக டிஜிட்டல் சாதனங்களை உபயோகிப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.

author avatar
Soundarya
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *