எந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி?

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் சந்தித்து வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் ஆகும்; இந்த துர்நாற்றத்தை மறைக்க நம்மில் பலரும் வாசனை கொண்டு திரிகிறோம். பல நேரங்களில் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை தாண்டி, நாம் உபயோகிக்கும் வாசனை திரவியத்தால் ஏற்படும் நாற்றமும் தலைவலியும் அதிகமாகும்.

இந்த பதிப்பில் எந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர்

பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நோய்த்தொற்றினை ஏற்படுத்தும் கிருமிகளால், அக்குளில் தோன்றும் வியர்வை கொடிய துர்நாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது; இதை தடுக்க, ஒரு காட்டன் பஞ்சினை அல்லது துணியை எடுத்துக்கொண்டு, அதை ஆப்பிள் சிடர் வினிகரில் தோய்த்து அக்குளை சுத்தப்படுத்தவும்.

தினந்தோறும் இவ்வாறு செய்வது உடலின் pH அளவை சமநிலைப்படுத்தி, வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க உதவும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் அதிக மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன; எலுமிச்சையை அல்லது அதன் சாறை அக்குள் பகுதியில் தேய்த்து, ஊற வைத்து பின் குளிப்பது உடலில் அக்குள் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க உதவும்.

ஆல்கஹால்

நாம் பயன்படுத்தும் பெரும்பாலான வாசனை திரவியங்கள் ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்படுவதே! ஆகையால் ஆல்கஹாலை அக்குளில் தடவுவதால்,வியர்வையால் ஏற்படும் கெட்ட துர்நாற்றத்தை போக்கலாம்.

ரோஸ் வாட்டர்

Ideal For Remove Suntan Face Cleaning<br >Multi Moisturizing Face Pack Making Makeup Removal<br >Facial Steaming Stops Acne Instant Natural Cool<br >Instant Refresher Highly Suitable for Travelers

ரோஸ் வாட்டரை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் அக்குளில் தடவி வருவதனால், அக்குளின் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க முடியும்.

பேக்கிங் சோடா

தினமும் எலுமிச்சை சாறுடன் பேக்கிங் சோடா கலந்து அக்குளில் தடவுவதால், துர்நாற்றத்தை எளிதில் போக்கலாம். மேலும் தூய்மையான துவைத்த ஆடைகளை அணிதல் மற்றும் தினசரி நன்கு குளித்தல் போன்றவற்றால் உடலில் துர்நாற்றம் ஏற்படாமல் எளிதில் தடுக்கலாம்.

author avatar
Soundarya

Leave a Comment