ஸ்மார்ட்போனில் இலவசமாக லோகோ(logo) மற்றும் பேனர்களை உருவாக்குவது எப்படி?

How to create logo and banners for free on smartphone

உங்கள் ஸ்மார்ட்போனில் இலவசமாக லோகோ மற்றும் பேனர்களை உருவாக்குவது எப்படி?
லோகோ கண்டிப்பாக தேவைப்படுகிறது, புதிய தொழில் துவங்கும் அனைத்து மக்களுக்கும்  , அதன்பின்பு யூடியூப், வலைதளம் போன்ற அனைத்து பயன்பாடுகளுக்கும் தற்சமயம் குறிப்பிட்ட அடையாளம் கொண்ட லோகோ தேவைப்படுகிறது. பொதுவாக லோகோ-வை உருவாக்குவதற்கு கண்டிப்பாக கணினி அல்லது லேப்டாப், சாதனங்கள் தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் நீங்கள் ஸ்மார்ட்போனைக் கொண்டும் எளிமையாக லோகோவை உருவாக்க முடியும். இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் உங்கள் ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட ஆப் வசதியை கொண்டு இலவசமாக லோகோவை உருவாக்க முடியும். முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் LogoPit plus-எனும் செயலியை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதன்பின்பு இந்த செயலின் முன்புறம் விருப்பங்கள் இருக்கும், அதவாது ஃபேஸ்புக் பேனர், யூடியூப் கவர், டிவிட்டர்வால் பேப்பர் மற்றும் லோகோ போன்ற பல்வேறு விருப்பங்களும் இருக்கும், இதில் உங்களுக்கு தேவையான பயன்பாட்டை தேர்வு செய்துகொள்ள முடியும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள லோகோ-வை கிளிக் செய்யதால், மிக அதிகமான டிசைன் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றை எளிமையாக பயன்படுத்த முடியும் பின்னர் உங்களுக்கு தேவையான டிசைனை தேர்வுசெய்து கொண்டு, அதில் கலர் விருப்பம், எழுத்துக்கள் மற்றும் 3டி அம்சங்களையும் பயன்படுத்த முடியும். உங்களுக்கு தேவையான லோகோ-வை உருவாக்கியபின்பு எளிமையாக உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்க முடியும். How to create logo and banners for free on the smartphone