உங்கள் நண்பரின் மொபைலை கன்ட்ரோல் செய்வது எப்படி.?

நீங்கள் அலுவலகம் செல்லும்போது உங்களின் மொபைலை மறந்து வீட்டிலேயோ அல்லது வேலைபார்க்கும் நிறுவனத்திலோ வைத்துவிட்டு சென்றால், அதில் இருக்கும் ஆவணங்களை எடுக்க கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, உங்கள் நண்பரின் மொபைல் மூலம் மிக எளிமையாக அந்த ஆவணங்களை எடுக்க முடியும்.

குறிப்பாக உங்கள் மொபைலில் இருந்து உங்கள் நண்பரின் மொபைலை ரிமோட் கன்ட்ரோல் செய்யவதற்கு மூன்று செயலிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த ரிமோட் கன்ட்ரோல் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

இந்த ரிமோட் கன்ட்ரோல் பயன்பாட்டை செயல்படுத்துவதற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் முதலில் TeamViewer for Remote Control -எனும் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அடுத்து QuickSupport-எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் இரண்டு மொபைல்களிலும் கண்டிப்பாக இந்த QuickSupport  செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது செயலியாக Add-On-எனும் செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த மூன்று செயலிகளையும் இன்ஸ்டால் செய்தபின்பு QuickSupport-செயலியை திறக்க வேண்டும்.

QuickSupport -செயலில் ஒன்பது இலக்க பின் நம்பர்(pin number) அமைக்க வேண்டும், அந்த பின் நம்பரை நீங்கள் ரிமோட் கன்ட்ரோல் செய்ய வேண்டிய மொபைல் போனுக்கு அனுப்பி மிக எளிமையாக ஆவணங்களை எடுக்க முடியும்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment