குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி..?அதிர வைக்கும் தகவல்கள்.!

  • டிஎன்பிஎஸ்சி  நடத்திய விசாரணையில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் முறைகேடு  நடைபெற்றது தெரியவந்துள்ளது. இந்த இரு மையங்களை தவிர வேறு எந்த மையங்களிலும் எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
  • சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.இந்த தேர்விற்கான தரவரிசை பட்டியலை கடந்த  நவம்பர் 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என தெரியவந்தது.

இது தொடர்ந்து மற்ற தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்தியது. தேர்வாணையம் நடத்திய விசாரணையில் ,சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அந்த விசாரணையில், ராமேஸ்வரம் கோவிலுக்கு இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க சென்றதாகவும்,   அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு வந்ததாகவும் கூறினார்கள். தேர்வர்கள் ஒரே மாதிரி அளித்த பதிலால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 99 பேருக்கு இடைத்தரகர்களின் பெயரிலே கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு செய்ததாகவும் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையிலான பேனாவினால் விடைகளை குறித்து விட்டு வந்ததும் .

image

இடைத்தரகர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டு இருந்த நபர்கள் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் செய்து மாற்று விடைத்தாள்களை அதே விடைத்தாள் கட்டுகளை எடுத்து வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனால் தான் 39 தேர்வர்கள் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்.

இந்த தேர்வு குறித்து தேர்வாணையம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் , சம்பந்தப்பட்ட தேர்வு கூடங்கள் ,கருவூலங்களை தல ஆய்வு செய்தும் , தேர்வு பணியில் ஈடுபட்டு இருந்த அலுவலர்கள் மற்றும் தேர்வர்களை நேரடியாக விசாரணை செய்ததன் அடிப்படையில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் முறைகேடு  நடைபெற்றது தெரியவந்தது எனவும் இந்த இரு மையங்களை தவிர வேறு எந்த மையங்களிலும் எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என தடை விதித்துள்ளது. தரவரிசை பட்டியலில்வந்துள்ள 39 பேருக்கு பதிலாக தகுதியான வேறு 39 தேர்வர்களை தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்க்கும் அனுமதிக்கப் பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

 

author avatar
murugan