எத்தனையோ கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகையின் மாஸ்க்கின் விலை இவ்வளவு தானா.? ஷாக்கில் ரசிகர்கள்.!

ஆலியா பட் அணிந்திருக்கும் மாஸ்க்கின் விலை ரூ. 333 மட்டும் தான் என்று

By ragi | Published: Aug 01, 2020 04:55 PM

ஆலியா பட் அணிந்திருக்கும் மாஸ்க்கின் விலை ரூ. 333 மட்டும் தான் என்று கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட் மிகவும் எளிமையானவர். அவர் வெளியே செல்லும் மிகவும் சிமிபிளான தோற்றத்திலே செல்வார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவர் சிம்பிளாக இருப்பதை கண்டு ரசிகர்கள் பலர் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர் வெளியே சென்ற போது அவர் அணிந்திருந்த மாஸ்க்கின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளியே சென்ற அவர் சிமிபிளான உடை, கையில் வாட்டர் பாட்டில், கிளவுஸ் மற்றும் மாஸ்க்குடன் சென்றுள்ளார். அவர் அணிந்திருந்த அடிடாஸ் பிராண்ட் மாஸ்க்கின் விலை வெறும் ரூ. 333 தானாம். ஆடம்பரங்களை தவிர்த்து விட்டு பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்ட ஆலியா பட்டை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள். பல பிரபலங்கள் தங்களின் பாதுகாப்பிற்காக தங்கம், வெள்ளியிலான மாஸ்க்களை அணிந்து வரும் இந்த சூழலில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஆலியா பட்டின் இந்த எளிமையை கண்டு ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc