சபரிமலை ஐயப்பன் கோவிலில் இத்தனை கோடி வருமானமா.? கேக்குறதுக்கே கண்ணுக்கட்டு தப்பா.!

  • சபரி மலையில் கோவில் நடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. மேலும் மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதியும், மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் கடந்த 15-ம் தேதியும் நடைபெற்றது.
  • இந்நிலையில், மண்டல, மகர விளக்கு காலத்தில், கோவிலில் ரூ.263.57 கோடி வருமானம் வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சபரி மலைக்கு வருடந்தோறும் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து, மலைக்கு சென்றுவருவார்கள். அப்போது, அவர்களது வேண்டுதலுக்கு ஏற்ப காணிக்கையை செலுத்தி, அங்கிருந்து பிரசாதம் வாங்கி வருவார்கள். இந்நிலையில், மண்டல, மகர விளக்கு காலத்தை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. மேலும் மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதியும், மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் கடந்த 15-ம் தேதியும் நடைபெற்றது.

இந்நிலையில், மண்டல, மகர விளக்கு காலத்தில், கோவிலில் ரூ.263.57 கோடி வருமானம் வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை மற்றும் வழிபாடு கட்டணங்கள் அடங்கும் என்றும் காணிக்கையாக வந்த நாணயங்கள் எண்ணப்பட்டு வருவதாகவும், இந்த பணி பிப்ரவரி 5-ம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்