சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை எவ்வாறு குணப்படுத்தலாம்.?

சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும் வழிமுறைகள் : மாசு ,குடும்ப

By Fahad | Published: Apr 09 2020 04:13 PM

சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும் வழிமுறைகள் : மாசு ,குடும்ப பின்னணி ,வைரஸ் தொற்று போன்றவைதான் ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணமாகும்.இந்த நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாக தோன்றுகின்றன. பெண்களுக்கு குறைவாகவே தோன்றுகின்றன. இந்த நோய் ஆண்களுக்கு அதிகமாக வருவதற்கான காரணம் மன அழுத்தம் ,கவலை போன்றவையால் ஏற்படுகிறது.இது முதலில் தலைவலி ,தூக்கமின்மை வரும் ,பிறகு நுரையீரல் பாதிப்பு,மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டு ஆஸ்துமாவாக மாறும். இதை குணப்படுத்த மருந்துகள் இருந்தாலும் இதை முழுமையாக குணப்படுத்த சித்த மருத்துவம் உதவி புரிகின்றன.எவ்வாறு சித்த மருத்துவம் உதவுகின்றன என்பதை பற்றி பின் வருமாறு காண்போம்.
  • தினமும் அதிகாலையில் எழுந்து அருகம்புல் சாற்றை குடித்தால் ஆஸ்துமாவை குணப்படுத்தலாம்.
  • துளசி இலையை எடுத்து கொண்டு தினமும் 10 இலையை நன்கு மென்று சாப்பிடுவதால் ஆஸ்துமாவை தடுக்கிறது.
  • தூதுவாழை செடி இலைகளை எடுத்து கொண்டு ரசம் வைத்து உணவில் சேர்த்து சாப்பிட்டால் ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.
  • மாதுளை பழச்சாற்றையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடிப்பதால் குடல் சம்மந்தமான பிரச்சனைகள் முற்றிலும் விலகுகிறது.
  • ஆடாதோடா இலையை கீரை போல் சமைத்து சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

Related Posts