அசத்தலான இனிப்பு சீடை எப்படி?

நமது அன்றாட வாழ்வில் பல விதமான விழாக்களை கொண்டாடுகிறோம். இந்த விழாக்களில் நமது இல்லங்களில் முதன்மையான இடத்தை பெறுவது பலகாரங்கள் தான். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு சீடை செய்வது எப்படி என்று பாப்போம்.

தேவையானவை

  • பச்சரிசி – 2 ஆழாக்கு
  • வெல்லம் – 2 ஆழாக்கு
  • தேங்காய் – 1 மூடி
  • பொட்டுக்கடலை – கால் ஆழாக்கு
  • ஏலக்காய் தூள் – 6 (தூளாக)

செய்முறை

முதலில் பச்சரிசியை களைந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஊற வைத்த அரிசியை நீரை வடித்து ஈர அரிசியை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பொட்டுக் கடலையை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி பாகு போல தயார் செய்ய வேண்டும். பாகில் ஈர அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளற வேண்டும். அதனுடன் பொட்டுக் கடலை மாவு துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பின் இதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வருமாறு பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான இனிப்பு சீடை தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.