டெல்லியில் காலாவதியாகும் பீர்களை விற்க அனுமதி

டெல்லியில் காலாவதியாகும் பீர்களை விற்க அனுமதி

டெல்லியில் காலாவதியாகும் பீர்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இந்த சமயத்தில் தான் நாட்டில் உள்ள பள்ளிகள் ,கல்லூரிகள் ,திரையரங்கங்கள் ,வணிக வளாகங்கள் ,மதுபான கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.   அங்கு புதிதாய் 1,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,13,740 ஆக அதிகரித்துள்ளது.அதுமட்டுமின்றி, குணமடைந்தோரின் எண்ணிக்கை 91,312 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஜூலை 31 -ஆம் தேதிக்குள்  காலாவதியாகும் பீர்களை விற்க ரெஸ்ட்ரோ பார்கள், ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது அரசு.

Join our channel google news Youtube