இருசக்கர சந்தியில் கதாநாயகனான ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது தனது புதிய பி.எஸ்.6 ஸ்கூட்டரை...

இருசக்கர சந்தையின் கதாநாயகனான ஹோண்டா நிறுவனம் தற்போது தனது  டியோ பி.எஸ்.6

By kaliraj | Published: Feb 15, 2020 07:10 AM

இருசக்கர சந்தையின் கதாநாயகனான ஹோண்டா நிறுவனம் தற்போது தனது  டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரை  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  இந்த புதிய டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரின் விலை ரூ. 59,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை  ஆக்டிவா பி.எஸ்.6 மாடலின் விலையை  விட விலை குறைவாகும். இந்த பி.எஸ்.6 ஹோண்டா டியோ மாடல்களில் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இதில் சிறப்பம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், 20 காப்புரிமை விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த புதிய ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பி,எஸ். 6 ஸ்கூட்டரில் ஹோண்டாவின் 110சிசி PGM-FI , இது ஹோண்டா இகோ தொழில்நுட்பம் கொண்ட  ஹெச்.இ.டி. என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.மேலும்  இதில் புதிதாக மேம்பட்ட ஸ்மார்ட் பவர் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் சர்வதேச தரத்திற்கு இணையானது. இந்த வாகனத்தின் தொழில்நுட்பம்  என்ஜின் சத்தத்தை குறைக்கிறது.
புதிய டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரில்
  • முழுமையான டிஜிட்டல் இன்ஸட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
  • இது ட்ரிப் மீட்டர், கடிகாரம் மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கிறது.
  • மேலும் இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது.
  • ஹோண்டா டியோ பி.எஸ்.6 மாடல்- ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • இதில் ஸ்டான்டர்டு வேரியண்ட்- மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், கேண்டி ஜாஸ் புளூ, ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் வைப்ரண்ட் ஆரஞ்சு என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
  • டீலக்ஸ் வேரிண்ட்- மேட் சங்கிரா ரெட் மெட்டாலிக், டேசில் எல்லோ மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
  • புதிய ஹோண்டா டியோ பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 59,990 துவங்கி ரூ. 63,340 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc