தனது மொத்த விற்பனை விவரத்தை வெளியிட்ட ஹோண்டா நிறுவனம்... ஏற்றுமதி இறக்குமதி குறித்த சிறப்பு தகவல்கள்...

Honda announces its wholesale sales ... Special Information on Import and Export ...

  • இந்தாண்டு மொத்த விற்பனை விவரத்தை வெளியிட்ட ஹோண்டா நிறுவனம்.
  • தனது புதிய பி.எஸ் 6 ரக மாடல்களின் வருகை குறித்த தகவல்கள் உங்களுக்காக.
ஹோண்டா நிறுவன மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தற்போது இந்தியாவில் 2020 ஜனவரி மாதம் வரை தனது இருசக்கர வாகனங்களின் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 3,74,091 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 29,292 யூனிட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. கடந்த ஜனவரி 2019 இல் ஹோண்டா நிறுவனம் 4,00,695 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. ஆனால், ஏப்ரல் 1, 2020 முதல் இந்தியாவில் மாசுகட்டுப்பாட்டு  பி.எஸ்.6 விதிகள் அமலாக இருக்கும் நிலையில், பி.எஸ்.6 வாகனங்கள் தங்கள் வாகனங்களின் விலையை  உயர்த்தப்பட உள்ளன. கடந்த மாதம் ஹோண்டா நிறுவனம் தனது புதிய மாடலான ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த பி.எஸ்.6 ஆக்டிவா 6ஜி மாடலில் பல்வேறு புதிய சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தன. கடந்த செப்டம்பர் மாதம்,  2019-இல் ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்ததன் மூலம் இந்தியாவில் பி.எஸ்.6 வாகனத்தை வெளியிட்ட முதல்  நிறுவனமாக ஹோண்டா நிறுவனம் திகழ்கிறது. இதை தொடர்ந்து, ஹோண்டா நிறுவனம் புதிதாக ஆக்டிவா 6ஜி, ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6, ஹோண்டா எஸ்.பி. 125 போன்ற புதிய ரக மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.