ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!

ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலை அமைந்துள்ளது. இவரது பிறந்தநாள் ஆண்டுதோறும், அக்டொபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

நாளை நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று மாலை சென்னையில் இருந்து மதுரை செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள விமானத்தில் டிக்கெட்  செய்துள்ளார்.  முதலமைச்சரும், எதிர் கட்சி தலைவரும் ஒரே விமானத்தில் பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.