நீண்ட காலம் வாழ்வதற்கு இந்த 6 உணவுகளை தினமும் மறக்காமல் சாப்பிடுங்கள்!

இப்போதுள்ள மனிதர்களின் வாழ்நாள் மிக குறைவு என்றே சொல்லலாம். இதை அதிகரிக்க உலக நாடுகளில் பலவித ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நம் முன்னோர்கள் நீண்ட ஆயுடன் வாழ்வதற்கு பல குறிப்புகளை நம்மிடமே விட்டு சென்றுள்ளனர்.

கோவில்களின் தூண்கள், கல்வெட்டுகள், பாறைகள் போன்றவற்றில் ஏராளமான தகவல்களை மூதாதையர்கள் பதிந்து வைத்துள்ளனர். இவை அனைத்துமே நாமும் அவர்களை போல நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் தான். இவர்கள் குறிப்பிட்ட உணவுகள் என்னென்ன என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.

இஞ்சி
நமது உணவில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இஞ்சியில் தான் உங்களை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கும் தன்மை உள்ளது. புற்றுநோய், எதிர்ப்பு சக்தி குறைபாடு, இதய நோய்கள், சர்க்கரை நோய் முதலிய பலவற்றில் இருந்து உங்களை காக்கும் தன்மை இதற்குண்டு. ஆதலால் இஞ்சியை அதிக அளவில் உணவில் சேர்த்து நீண்ட ஆயுடன் வாழுங்கள்.

நெல்லிக்கனி
“அவ்வை பாட்டிக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனி”யின் மகிமையை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். ஆயுர்வேதம் முதல் சித்த வைத்தியம் வரை நெல்லிக்கனி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. நெல்லியை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் ஆயுள் உங்களுக்கு கெட்டி.

ஏலக்காய்
சீன மருத்துவதில் ஏலக்காய் முக்கிய இடம் பிடித்துள்ளது. சீனர்கள் அதிக ஆயுளுடன் வாழ ஏலக்காயை டீயாக தயாரித்து குடிப்பார்கள். இவை உடலின் முழு ஆரோக்கியத்தையும் காக்கும் என இவர்கள் கூறுகின்றனர்.

ஜீரகம்
இயற்கை முறையிலான மூலிகை தன்மை ஜீரகத்திற்கு உள்ளது. இரும்புசத்து, நார்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் ஜீரகத்தில் நிறைந்துள்ளதால் பலவித நோய்களை தடுத்து உங்களை அதிக காலம் உயிர் வாழ வைக்குமாம்.

தேன்
நீண்ட நாள் கெட்டு போகாத உணவுகளில் தேன் தான் முதல் இடம். அதே போன்று நமது ஆயுளையும் இது அதிகரிக்க உதவுகிறதாம். எதிர்ப்பு சக்தியை கூட்டி, நீண்ட காலம்
ஆரோக்கியமாக அதிக இளமையுடன் வாழ தேன் உங்களுக்கு பயன்படுகிறதாம்.

மிளகு
குழந்தைகள் பெரும்பாலும் மிளகை சாப்பிடாமல் அப்படியே தூக்கி போட்டு விடுவார்கள். இது அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைபாட்டை உண்டாக்க கூடும். ஆதலால், மிளகை குழந்தை பருவத்தில் இருந்தே தவறாது சாப்பிட்டு வந்தால் ஆயுள் கூடும்.

இந்த 6 உணவு பொருட்களும் நம் வீட்டில் இருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment