" எல்லையில் பதற்றம் அடுத்த கட்ட நடவடிக்கை " உள்துறை அமைச்சர் ஆலோசனை...!!

" எல்லையில் பதற்றம் அடுத்த கட்ட நடவடிக்கை " உள்துறை அமைச்சர் ஆலோசனை...!!

  • இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது.
  • பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துகின்றார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. மேலும் பாகிஸ்தான் விமானத்தை விரட்டி தாக்குதல் நடத்தி இந்திய அரசு  பதிலடி கொடுத்தது. இந்த பதிலடி தாக்குதலில் இந்திய விமானம் கீழே விழுந்து விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார். இதையடுத்து இந்திய எல்லைப் பகுதியில் தொடர் பதற்றம் ஏற்படுகின்றது. இந்நிலையில் இந்திய ராணுவம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், அபிநந்தன் மீட்பது தொடர்பாகவும் , இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்க் உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றார்.

Latest Posts

தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷைப் பாராட்டிய பிரதமர் மோடி..!
உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு - நாளை விசாரணை
கேப்டனாக தினேஷ் கார்த்திக்கு பதில் இவரை நியமிக்கலாம்....சுனில் கவாஸ்கர்...!
மஹாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!
மாணவர்களிடையே பெரும் அச்சமும், பதற்ற மனப்பான்மையும் தற்போது உருவாகியுள்ளது - மு.க.ஸ்டாலின்
மும்பையில் மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு...!
ஒருநாள் உண்ணாவிரதம்- ஹரிவன்ஷ் அறிவிப்பு..!
முட்டை விலை 10 காசுகள் உயர்வு..!
வினாடிக்கு 70 கன அடியாக நீர்வரத்து ஒகேனக்கல்லில் அதிகரிப்பு!
#சட்டநடவடிக்கை பாயும்-கூகுள் மீது பேடிஎம் பாய்ச்சல்!!!