‘பிகில்’ ட்ரைலரை பார்த்து விட்டு அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்..!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “பிகில்” இப்படத்தில் நயன்தாரா , விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வர உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டிரைலர் வெளியானது.
இப்படத்தின் டிரைலர் வெளியான சில மணி நேரத்திலேயே 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும் இப்படத்தின் ட்ரைலரை பார்த்த பல பிரபலங்கள் அட்லிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் டிரைலரை பார்த்துவிட்டு ஹாலிவுட் பிரபல நடிகரும் ,இயக்குனருமான பில் டியக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் “இயக்குனர் அட்லி இது சிறப்பான ட்ரைலர். அமெரிக்காவில் எப்போது வெளியாகும். அமெரிக்காவில் “பிகில்” படத்திற்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்படுகிறது. அப்படி வெளியிட்டால் கண்டிப்பாகத் தெரிவியுங்கள்” என பதிவில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அட்லீ “கண்டிப்பாக சார் நன்றி ” என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan