ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஹாலிவுட் நடிகை..!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மேடை ஏறிய நடிகை ஏசியா அர்ஜன்டோ ஹாலிவுட்டில் பெண்களை பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்தும் ஆண்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரங்கில் அமர்ந்துள்ள ஆண்கள் பலர் இக்குற்றத்தை செய்தவர்கள்தான் என்று பகிரங்கமாக சாடிய நடிகை, நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும், அதை விட நீங்கள் யார் என்பது எங்களுக்கும் தெரியும் என்றார். இனிமேல் பெண்களுக்கு எதிரான ஆண்கள் தப்பிவிட முடியாது என்றும் நடிகை எச்சரித்தார்.

பாலியல் துன்பத்துக்கு ஆளாகும் நடிகைகளுக்காக புகார் எண் ஒன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்டது. இதனிடையே “Shoplifters”,படத்தை இயக்கிய ஜப்பானிய இயக்குனர் ஹிரோகோசு ((Hirokazu )) சிறந்த படத்திற்கான கேன்ஸ் விருதைப் பெற்றார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment