LKG , UKG மாணவர்களுக்கு விடுமுறைதான்.! இன்று முறையான அறிவிப்பு வரும்-முதலமைச்சர்

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை தான் என்று முதலமைச்சர் பழனிசாமி

By venu | Published: Mar 15, 2020 06:34 AM

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை தான் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. 

பின் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் LKG, UKG மாணவர்களுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த குழப்பங்களுக்கு மத்தியில் முதலமைச்சர்  பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.அதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை தான்.முறையான அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

Step2: Place in ads Display sections

unicc