நட்சத்திர வீரர்களின் விக்கெட்டையும் பறித்து , இரண்டு ஓவர் மெய்டன் செய்த ஹோல்டர்!

நேற்றைய போட்டியில் இந்திய அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களாக கே .எல் ராகுல் ,ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே ரோஹித் ஷர்மா 18 ரன்னில் வெளியேற பின்னர் கோலி களமிறங்கினர்.
கே .எல் ராகுல் , கோலி  இருவரும் கூட்டணியில் சிறப்பாக விளையாடினர்.அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் வீசிய பந்தில் கே .எல் ராகுல் 48 ரன்னில் அவுட் ஆனார். பிறகு அதிரடியாக விளையாடிய விராட் கோலியையும் 72 ரன்னில் சுருட்டினர்.


இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் வீசிய 10 ஓவரில் 2 நட்சத்திர விக்கெட்டையும் பறித்து .இரண்டு ஓவரை மெய்டன் செய்தது வெறும் 33 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.மேலும் நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வெறும் யாரும் ஒரு ஓவரை கூட மெய்டன் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 
source: icc
 
 

author avatar
murugan