கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: விசாரணை நடத்த உயர்மட்டக்குழு..!சுகாதாரத்துறை உத்தரவு

கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்டக்குழு அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊழியர்கள் செலுத்தினார்கள்.
ரத்தம் செலுத்திய விவகாரத்தில் ரத்தவங்கி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில்  கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்டக்குழு அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை ராஜாஜி மருததுவமனையின் ரத்த வங்கி தலைவர் டாக்டர் சிந்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிந்தா தலைமையிலான குழு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகளில் நேரில் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழகம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
சிவகாசி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றியது தொடர்பாக அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் அதிகாரிகள் விசாரணை  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment