உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஹிட்மேன் முதலிடம் !

நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி உடன் இந்திய அணி மோதியது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின்  தொடக்க வீரராக ரோஹித் சர்மா  களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 92 பந்தில் 104 ரன்கள் எடுத்தார்.இதில் 7 பவுண்டரி ,5 சிக்ஸர்அடங்கும்.

இந்நிலையில் நடப்பு உலக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் வார்னர் முதலிடத்தில் இருந்தார். தற்போது அந்த இடத்தை ரோஹித் சர்மா தட்டி பறித்தார்.மேலும் நேற்றைய போட்டி மூலம் பங்களாதேஷ் அணி வீரர் ஷாகிப் 542 ரன்கள் எடுத்து இரண்டாமிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் – 544
ஷாகிப் – 542
வார்னர் – 516
பிஞ்ச் – 504

author avatar
murugan