ஹிட்மேன் காலில் விழுந்த தீவிர ரசிகர்..!அதிர்ந்து போன ஹிட்மேன்..!

புனேவில் இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

By murugan | Published: Oct 12, 2019 04:00 PM

புனேவில் இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 601 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த போது டிக்ளேர் செய்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 254* , மயங்க் அகர்வால் 108 ரன்கள் குவித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. இதில் டீன் எல்டர் 6 , புவுமா  8  மற்றும் மார்க்ரம் ரன் எடுக்காமலும் வெளியேறினர். இதனால் தென்னாபிரிக்க அணி திணறியது.அப்போது அணியின் கேப்டன் டு பிளெசிஸ் 64 , குவின்டன் டி காக் 31 ரன்கள் அடித்து அணியின் எண்ணிக்கையை உயர்தினர். தற்போது தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழந்து 254 ரன்களுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் போட்டியின்போது மைதானத்தில் இந்திய வீரர்கள் பில்டிங் செய்து கொண்டிருந்தனர்.அப்போது ஒரு ரசிகர் ரோஹித் சர்மா பெயரை பதித்த டி -சர்ட் அணிந்து  ரோகித் சர்மா நோக்கி ஓடிவந்தார். ரோகித் சர்மா அருகில் வந்த உடனே திடீரென ரோகித் சர்மா காலில் விழுந்து விட்டார். Image இதை சிறிதும் எதிர்பார்க்காத ரோகித் சர்மா அந்த ரசிகரை தூக்கி விட்டார்.பின்னர் அங்கு ஓடி வந்த மைதான அதிகாரிகள் அந்த ரசிகரை மைதானத்தில் இருந்து இழுத்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போட்டி நடைபெறாமல் இருந்தது.
Step2: Place in ads Display sections

unicc