டி20 போட்டியில் கெயிலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தட்டி பறித்த ஹிட் மேன் !

டி20 போட்டியில் கெயிலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தட்டி பறித்த ஹிட் மேன் !

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா 24 ரன்கள் அடித்தார். அதில் 2 சிக்ஸர் அடங்கும்.இதன் மூலம் டி20 போட்டிகளில் 104 சிக்ஸர் அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார்.இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 105 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்றுநடந்த போட்டியில் ரோஹித் சர்மா 67 ரன்கள் அடித்தார்.அதில் 6 பவுண்டரி , 3 சிக்ஸர் விளாசினார்.தற்போது டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா 107 சிக்ஸர் அடித்து முதல் இடத்தில் உள்ளார். கிறிஸ் கெயில் 105 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும் , நியூஸிலாந்து அணி வீரர்  மார்டின் குப்தில் 103 சிக்ஸர்களுடனும் 3 வது இடத்தில் உள்ளார்.

Latest Posts

#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!
மாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம் இதோ
ஹிந்தி தெரியாதா?... நோ லோன்... ஓய்வுபெற்ற மருத்துவரை அவமதித்த வங்கி மேலாளர்...
#IPL2020:ராஜஸ்தானிடன் சறுக்கியது ஏன்??தோனி விளக்கம்
கண் வீக்கங்களை போக்க இயற்கையான வழிமுறைகள் இதோ!
#IPL2020:KKRvsMI-யாரு டாப்புனு!இன்னைக்கு பாத்துருவோம்!!