வரலாற்றில் இன்று(19.03.2020)… காந்தியவாதி கிருபாளினி மறைந்த தினம் இன்று…

காந்தியத்தை  இந்தியா முழுவதும் பரப்பிய ஜீவித்ராம் பகவன்தாஸ் கிருபளானி அவர்கள் 1888ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  11ஆம் நாள்  சிந்து மாகாணத்தின் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் தனது கல்லூரி வாழ்வில் ஒருமுறை அங்கு  படிக்கும்போது, ‘இந்தியர்கள் பொய்யர்கள்” என்று கூறியதற்காக மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தினார் என்பது மறக்க முடியாத ஒன்று.
பின், இவர் மகாத்மா காந்தியடிகள்  நிறுவிய குஜராத் வித்யாபீடத்தின் முதல்வராக பணியாற்றினார். இவர் வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாகவே திகழ்ந்தார் என்பாது குறிப்பிடத்தக்கது.

  • இவர், ஒத்துழையாமை இயக்கம்,
  • உப்பு சத்தியாகிரகம்,
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டு, பலமுறை சிறை சென்றுள்ளார்.

அரசியலில் இவர்:

  • 1934 முதல் 1945 வரை இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.
  • 1946ல் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • காங்கிரஸிலிருந்து விலகி, க்ருஷக் மஸ்தூர் பிரஜா பார்ட்டி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
  • இவர் 1952,
  • 1957,
  • 1963,
  • 1967ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
  • அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் சமூகம், சுற்றுச்சூழல் நலன்களுக்காகவும் பணியாற்றிய இவர் 93வது வயதில் 1982 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் நாள்  மறைந்தார்.இவர் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.
author avatar
Kaliraj