வரலாற்றில் இன்று(மே 20)… அறியாமையை அகற்ற முனைந்த அயோத்திதாச பண்டிதர் பிறந்த தினம் இன்று…

வரலாற்றில் இன்று(மே 20)… அறியாமையை அகற்ற முனைந்த அயோத்திதாச பண்டிதர் பிறந்த தினம் இன்று…

ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு மட்டுமல்லாத  சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கொள்கை கொண்ட  அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தின இன்று.

இவர், 1845ஆம் ஆண்டு  மே மாதம்  20ஆம் நாள்  சென்னையின்  ஆயிரம் விளக்கு பகுதியில் நல்ல கல்விப் பின்புலம் கொண்ட தலித் குடும்பத்தில் பிறந்தார் அயோத்திதாசர். இவரது  பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் காத்தவராயன். இவரது தாத்தா கந்தப்பன் ஜார்ஜ் ஹாரிங்டன் எனும் ஆங்கிலேயரிடம் பணிபுரிந்தவர் ஆவர், இவர் தன்னிடம் சேகரிப்பில் இருந்த திருக்குறள் படிகளை எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் கந்தப்பன். நீலகிரிக்குக் குடிபெயர்ந்த அயோத்திதாசர், தோடர் இன மக்களை ஒன்றிணைத்து ‘அத்வைதானந்த சபை’ எனும் அமைப்பை உருவாக்கினார்.

தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு தலித் மக்கள் ஆளாவதைக் கடுமையாக எதிர்த்தார். எனவே  இந்து மதம் தலித் மக்களைச் சாதிய ரீதியாக ஒடுக்குவதாகக் கருதிய அவர், இந்து மதத்தைத் தாண்டி தலித் மக்களை அடையாளப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். ஆதித் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று முதலில் கூறியவர் அவரே. பின் நாட்களில் புத்த மதத்தைத் தழுவிய அயோத்தி தாசர், தலித் மக்களும் புத்த மதத்தைத் தழுவ வேண்டும் என்று வலியுறுத்தினார். சென்னையில் தலித் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றை நடத்தி வந்த  ஜான்ரத்தினம் என்பவரது நட்பு கிடைத்து  அவர் மூலம்  ‘திராவிடப் பாண்டியன்’ எனும் இதழில் அயோத்திதாசர் பணி புரிந்தார். இது இவர் 1907-ல் ‘ஒரு பைசா தமிழன்’ எனும் இதழை நடத்த இந்த அனுபவம் அவருக்குப் பெரிதும் உதவியது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடக்குமுறைகளுக்குக் காரணமான சாதிய அமைப்பைக் கண்டித்தார். ‘அரிச்சந்திரன் பொய்கள்’, ‘திருவள்ளுவர் வரலாறு’,‘புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி’ உட்பட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். வாழ்நாளின் இறுதிக் காலத்தில் திருக்குறளுக்கு உரை எழுதும் பணியில் ஈடுபட்டார்.  இத்தகைய அரும்பாடு பட்ட  அயோத்திதாசர், 1914 ஆம் ஆண்டில்  தனது 69-வது அகவையில்  இவ்வுலகை விட்டு மறைந்தார்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube