மதுரையில் பைபிள்கள் சர்ச்சில் புகுந்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு….!!

 

மதுரை-அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர்சாவடி, சதங்கை கலை மையம் அருகிலுள்ள சர்ச் மற்றும் கூடல்புதூர் பகுதியிலுள்ள இரண்டு சர்ச் களுக்கு ஞாயிறன்று ஐம்பது பேர் கொண்ட இந்துத்துவ வெறிக்கும்பல் ஒன்று சென்றுள்ளது. இனிமேல் நீங்கள் யாரும்சர்ச் நடத்தக்கூடாது. அடுத்த வாரம் சர்ச் நடத்தினால் உங்களை எல்லாம் இங்கிருந்து விரட்டியடிப்போம் என அந்தக்கும்பலில் இருந்தவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து சிக்கந்தர்சாவடி மந்தையம்மன் கோவில் தெரு பகுதியில் சர்ச் நடத்தி வரும் ரவிஜேக்கப் என்பவர் கூறுகையில், ஞாயிறு காலை 9.30 மணிக்கு சுமார் 50 பேர் கொண்ட கும்பல் வந்து எங்களை மிரட்டியது. சர்ச்சில் உள்ள மைக் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து நாசப்படுத்திவிட்டனர். சுமார் 30 பைபிள்களை எரித்துவிட்டனர். மேலும் நீங்கள் ‘மதமாற்றம் செய்கி றீர்களா, வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்துகிறீர்களா’ எனக் கூறி எங்களை அச்சுறுத்தினர் என்றார்.

மேலும் அந்த சர்ச்சில் வழிபட்டு வந்த பெர்ஷியா என்ற பெண் கூறுகையில், ‘எனது சேலையை உருவி நிர்வாணப்படுத்தி அதை வாட்ஸ்-ஆப் மூலம் பரவ விடுவோம் என என்னைஅச்சுறுத்தினர்’ என்றார்.இந்துத்துவ வெறியர்களின் தாக்குதலுக்குள்ளான பெர்ஷியா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சதங்கை கலைமையம் அருகிலுள்ள சர்ச், கூடல்புதூர் பகுதியிலுள்ள இரண்டு சர்ச்சுகளுக்கும் அந்த கும்பல்சென்றுள்ளது. அங்கு வழிபாடுநடத்திக் கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தி, அடுத்தவாரம் முதல் சர்ச் நடத்தக்கூடாது. சர்ச் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும், சர்ச்களைகொளுத்திவிடுவோம் என எச்சரித்துள்ளது.இச்சம்பத்தினால் தாக்குதலுக்குள்ளான சர்ச்சின் போதகர் ரவி ஜேக்கப் உள்ளிட்ட மிரட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்க ளைச் சேர்ந்த ஜெரோம் ஜெகதீசன், ஸ்டேனிஸ்லாஸ் ஆகியோர் மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்துத்துவ வெறி யர்கள் கிறிஸ்தவ தேவால யங்களை தாக்கியும், அவர்களை மிரட்டியும் சென்றுள்ளது கிறிஸ்தவ மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தகவலறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேற்கு பகுதியின் ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம் மிரட்டப்பட்ட, தாக்குதலுக்குள்ளான சர்ச்சுகளின் போதர்களைச் சந்தித்து நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான சட்டம் மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்தார். மதுரை மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் சர்ச் தாக்கப்பட்டதற்கும், போதகர்கள் மிரட்டப் பட்டதற்கும் மதுரை மக்கள் ஒற்றுமை மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைப்பின் கன்வீனர்கள் எம்.பாலசுப்பிரமணியன், எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:-சிறுபான்மை மக்களை குறிவைத்து மதுரை மாவட்ட த்தில் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதை வன்மையாகக் கண்டிக் கிறோம். குறிப்பாக கடந்த ஜனவரி 26-ஆம் தேதி மதுரை கூடல்நகரில் உள்ள புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்த இந்துத்துவ கும்பல் அந்தப் பள்ளி நிர்வாகிகளை மிரட்டிச் சென்றது. இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அப்போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது நடைபெற்றிருக் கின்ற சர்ச் மீதானதாக்குதல், பைபிள் எரிக்கப்பட்டது, போதகர்கள் மிரட்டப்படுவது போன்ற சம்பவங்கள் நட ந்திருக்காது.

இச்சம்பத்தினால் ஏற்பட்டுள்ள ஒரு அசமத்துவ நிலையினை கருத்தில்கொண்டு மதுரை மாநகர் காவல் துறையும், மாவட்ட காவல் துறையும் பாதிக்கப்பட்ட சர்ச்சின் பொறுப்பாளர்கள் அளித்துள்ள புகார் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளி களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை மதுரை மக்கள் ஒற்றுமை மேடை உறுதியாக துணை நிற்கும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment