பெண்களுக்கு உயர் பதவி.! நீதிமன்றம் உத்தரவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆதரவு.!

பெண்களுக்கு உயர் பதவி.! நீதிமன்றம் உத்தரவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆதரவு.!

  • இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவிகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராணுவத்தில் பெண்களுக்கான நிரந்தர கமிஷன் அமைக்கக்கோரி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் வலம் வந்து சாதனை படைத்து வருகின்றனர். இவர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் நாட்டை காப்பாற்றும் பணியான இராணுவத்திலும் சேர்ந்து சாதித்து உள்ளனர். இந்த நிலையில் இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவிகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ராணுவத்தில் பணியாற்றுகின்ற பெண் அதிகாரிகள் 1 4 ஆண்டிற்கு மேல் பணியை தொடர்ந்தால் அவர்களுக்கு உயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் இராணுவத்தில் உள்ள பெண்களுக்கு கமாண்டர் பிறப்பு வழங்க வேண்டும் என்று ஆணை விடுத்துள்ளது.

அது மட்டுமின்றி, ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற வேறுபாடின்றி பெண்களை சமமாக நடத்தவும், ராணுவத்தில் பெண்களுக்கான நிரந்தர கமிஷன் அமைக்கக்கோரி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பெண்களை இராணுவத்தில் நியமனம் செய்வதையும் நிரந்தரமாக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு அளித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பதிவில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு சிறப்புமிக்கது என குறிப்பட்டுள்ளார். ராணுவத்தில் பெண்களுக்கான நிரந்தர கமிஷன் குறித்து பிரதமர் மோடி 2018ல் தமது சுதந்திர உரையின் போதே தெரிவித்ததாகவும், அதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Join our channel google news Youtube