முல்லை பெரியாறு அணை வழக்கு: வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் விசாரிக்க மறுப்பு!!

  • முல்லை பெரியாரின் அணை பகுதியில் கேரள அரசு தமிழக அரசின் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தம் அமைக்க முடிவு செய்தது.
  • இன்று அதிரடியாக இந்த வழக்கில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அதிரடி முடிவு எடுத்துள்ளார் கே எம் ஜோசப்.

முல்லை பெரியாரின் அணை பகுதியில் கேரள அரசு தமிழக அரசின் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தம் அமைக்க முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசிடம் எந்தவித ஒப்புதலும் வாங்கவில்லை. இதற்கு அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினை விசாரிக்க கே எம் ஜோசப் தலைமையிலான அமர்வு நியமிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து கே எம் ஜோசப் இந்த வழக்கினை விசாரிக்க திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

காரணம், தான் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்த வழக்கினை நான் விசாரித்தால், அதற்கு நீதி வழங்கினாலும் சரியாக இருக்காது. இதனாலேயே, தொடர்ந்து விசாரிக்க மறுத்து வந்தார் உச்சநீதிமன்ற நீதிபதி.

இந்நிலையில், இன்று அதிரடியாக இந்த வழக்கில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அதிரடி முடிவு எடுத்துள்ளார் கே எம் ஜோசப்.

author avatar
Vignesh

Leave a Comment