தமிழ்நாடு விஏஓ-களின் சொத்துக்களை சரிபார்க்க உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

காளீஸ்வரி என்ற பெண் முதல் திருமணம் செய்து அவரை முறையாக விவாகரத்து செய்யாமல் இன்னொருவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இரண்டாம் கணவர் இறந்துவிட அவர் விதவை அடிப்படையில் வேலை வழங்க அரசிடம் கோரி இருந்தார். இதற்க்கு காளீஸ்வரியின் உறவினர் முறையில் உள்ள ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணி கிடைக்காமல் இருந்தது.

பின்னர்,  அந்த பிரச்சனை உயர்நீதிமன்ற கிளை வரை சென்றது. அப்போது முதல் கணவரை காளீஸ்வரி முறையாக விவாகரத்து செய்யவில்லை. எனவும், கோரப்பட்டிருந்தது. காளீஸ்வரி அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரியிடம் விவாகரத்து செய்ததாக ஒரு  சான்றிதழ் வாங்கியுள்ளார். இதனை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த விவகாரம் தான் தற்போது கிராம நிர்வாக அதிகாரிகளின் சொத்து கணக்கை சரிபார்க்க கோரியுள்ளது. அதாவது, விவாகரத்து சான்று அளிக்க கிராம நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. கிராம நிர்வாக அதிகாரி கொடுக்கும் சான்றிதழ்களை ஒரு முறையான பதிவேடு இல்லை. பிறப்பு சான்று முதல் இறப்பு சான்று வரை லஞ்ச புகார்கள், காசு கொடுத்தால் போலி சான்றுகள், என பல்வேறு குற்றசாட்டுகள் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டன.

இதன் பேரில், கிளை உயர் நீதிமன்ற நீதிபதி, ‘ கிராம நிர்வாக அதிகாரிகளின் சொத்துக்கணக்குகளை சரிபார்க்க வேண்டும் எனவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்து வைத்திருந்தால், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பணிகுறிப்பில் இதனை பதிவிட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.