ஐஎஸ் தீவிரவாதிகளுடன் புறப்பட்ட மர்ம படகு !தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படை

Mystery boat with IS militants

இலங்கையிலிருந்து லட்சத்தீவுகள் நோக்கி ஐஎஸ் தீவிரவாதிகள் செல்வதாக ரகசிய தகவல் வெளியானதை அடுத்து இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு உலகையே உறைய வைத்தது.இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றது.இதனால் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ,இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகள் நோக்கி படகு ஒன்றில் 15-க்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் செல்வதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. கேரள கடல் எல்லை வழியாக ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவி விடாமல் தடுக்க கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .மேலும் லட்சத்தீவுகள், மினிக்காய் தீவுகளில் கடலோர காவல் படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Security in India has been strengthened following the release of confidential reports that IS militants are heading towards the Lakshadweep Islands from Sri Lanka. The explosion in Sri Lanka has frozen the world. Ice blasts were responsible for the blast. Confidential information has revealed that more than 15 IS militants were aboard a ferry from Sri Lanka to Lakshadweep. The Marines have been actively engaged in surveillance to prevent IS militants from infiltrating the Kerala Maritime Borders.