இவ்ளோ பெரிய சாதனை செஞ்சும் ஒரு ஸ்கூட்டிய தோற்கடிக்க முடியவில்லையே! ஹீரோ வெஸ் ஹோண்டா!!

இந்திய அளவில், ஏன் உலக அளவில் மோட்டார் சைக்கிள் விற்பனையில் பல சாதனைகளை ஹீரோ நிறுவனம் செய்தாலும், ஒரு ஸ்கூட்டரின் சாதனையை அதனால் முறியடிக்க முடகயவில்லை. அந்த ஸ்கூட்டர்தான் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா!  ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்யயும் ஆக்டிவா ஸ்கூட்டரே இந்தியாவில் அதிக விற்பனை செய்யபடும் வாகனமாகும். 
இந்தியாவில் விற்க்கபடும் ஸ்கூட்டர்களின் சதழக்ஷவீதத்தை ஹோண்டா நிறுவனமே 60 சதவீதத்தை பெற்றுள்ளது. ஹீரோ நிறுவனம் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது.
இந்தியாவில் பெரு நகரங்களில் இளைஞர்களின் முக்கிய சாய்ஸ் ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களே உள்ளன. இதனால் உலகிலேயே அதிக வாகனங்களை விற்பனை செய்யும் ஹீரோ நிறீவனம் கூட இந்தியாவில் ஹோண்டா ஸ்கூட்டர்களின் வளர்ச்சியை கண்டு பயந்துள்ளது.   செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 7,69,138 இரு சக்கர வாகனங்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்தது. இதில் ஹீரோ   ஸ்ப்ளன்டர்பைக்குகள் சுமார் 2,89,000  பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் 2,85,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 
இதற்காக ஹீரோ நிறுவனம் புதிய ஸ்கூட்டர்களை இறக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஹீரோ டூயட், மேஸ்ட்ரோ, ப்ளசர் ஆகிய புதிய 110cc, 120cc பைக்குகளை களமிறக்கி இரண்டாம் இடத்தை புடிக்க முயற்ச்சி செய்து வருகிறது.
ஏனென்றால், இரண்டாம் இட்த்தில் இருப்பது டிவிஎஸ் நிறுவனத்தின் வாகனங்கள். முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா, டியோ என களமிறக்க இரண்டாம் இடத்தில் டிவிஎஸ் எக்ஸ் எல் ஹெவி டியூட்டி, எக்ஸ் எல் 100 என மிடில் க்ளாசை கவர் செய்து கம்பீரமாக இரண்டாம் இடத்தில் உள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment