சிவகார்த்திகேயன் படத்தில் யுவன் இசையமைத்து பாடியுள்ள 'ஓவரா ஃபீல் பண்றேன்' பாடல் இதோ!

சிவகார்த்திகேயன் படத்தில் யுவன் இசையமைத்து பாடியுள்ள 'ஓவரா ஃபீல் பண்றேன்' பாடல் இதோ!

  • சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ.
  • இப்படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா இசையில் ஓவரா ஃபீல் பண்றேன் எனும் பாடல் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படத்தை இரும்பு திரை இயக்குநர் மித்ரன் இயக்கியுள்ளார். KJR நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அபி  தியோல், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியான நிலையில், தற்போது ஓவரா ஃபீல் பண்றேன் எனும் காதல் ராப் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை பா.விஜய் எழுத யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ளார். தற்போது ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் வேகமாக பரவி வருகிறது.