சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ போஸ்டரில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்னென்ன தெரியுமா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. அதனை தொடர்ந்து டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அர்ஜுன் மற்றும் இன்னொரு பாலிவுட்டின் முக்கிய நடிகரும் முக்கிய வேடத்தில நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நேற்று காலை இப்பட போஸ்டர் வெளியானது. இதில் மறைந்திருக்கும் சில தகவல்களை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதில் ஒரு பக்கம் நீட் எக்ஸாம் என்.ஐ.டி எக்ஸாம் பற்றிய கோச்சிங் சென்டர் உள்ள ஒரு கட்டிடமாகவும், இன்னொரு கட்டிடத்தில் பேரஷூட் பறப்பது போலவும், இன்னொரு இடத்தில் நெக்ஸா சிண்டிகேட் என்ற கட்டிடமும், நான்காவது பக்கத்தில் ஒரு ஆண்டனா அதன் கீழே ஒரு கண்ணாடி பில்டிங் அதனுள் ஒருவர் நிற்பது போலவும் (அனேகமாக அது சிவகார்த்திகேயனாக இருக்கக்கூடும்) போஸ்டரில் மறைந்துள்ளளது.

இந்த போஸ்டர்களை உற்றுநோக்கி ரசிகர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.