ஹீரோ படத்திலிருந்து அடுத்ததாக நீக்கப்பட்ட காட்சி வெளியானது! ரசிகர்கள் வருத்தம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஹீரோ.

By manikandan | Published: Dec 23, 2019 07:11 AM

  • சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஹீரோ.
  • இப்படத்திலிருந்து வெளியான இரண்டு நீக்கப்பட்ட காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். நம் நாட்டின் கல்வி முறை பற்றி இப்படம் வெகுவாக அலசுகிறது. அதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திலிருந்து ஒரு நீக்கப்பட்ட காட்சி ஏற்கெனவே வெளியாகி இருந்தது. அந்த காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதனை அடுத்து நேற்று இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட இரண்டாவது கட்சியும் வெளியானது.  இந்த காட்சி காதல் காட்சியாக வெளியாகி இருந்தது. இந்த காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த இரண்டு நல்ல காட்சிகளும் படத்தில் இல்லாமல் போனது தங்களுக்கு வருத்தமளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc