கற்பமான கரப்பான்பூச்சி…கத்தியால் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் -வினோத வீடியோ இதோ.!

  • ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் வளர்ப்பு பூச்சியாக அர்சிமந்திரத்தா என்ற அறிய வகை கரப்பான்பூச்சி ஒன்றை வளர்த்து வந்தார்.
  • அந்த கரப்பான் பூச்சி கற்பமான நிலையில் அதற்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது.அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது கரப்பான் பூச்சி நலமுடன் இருப்பதாக மருத்துவர் தகவல் 

ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் அர்சிமந்திரத்தா என்ற அறிய வகை கரப்பான்பூச்சி ஒன்றை தனது வளர்ப்புப் பூச்சியாக வளர்த்து வந்தார். சமீபத்தில் தான் வளர்த்து வந்த கரப்பான்பூச்சி ஏதோ சிரமப்பட்டு வருவதை உணர்ந்த வளர்ப்பாளர் அதனை உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.

மருத்துவமனையில் கரப்பான்பூச்சியை பரிசோதித்த மருத்துவர் உங்களுடைய கரப்பான்பூச்சி கர்ப்பமாக இருக்கிறது என்றும் அதற்கு பிரசவம் நேரம் நெருங்கிவிட்டது என்று வளர்ப்பாளரிடன் கூறியுள்ளார்.மேலும் கரப்பான் இயற்கையான முறையில் பிரசவிக்க முடியாது இது கரப்பான்பூச்சிக்கு சிக்கலை தரும் என்பதால் உடனடியாக மூன்று விதமான மயக்க மருந்துகள் கரப்பானுக்கு தரப்பட்டது. மேலும் அது உள்ளே எடுத்துக் கொள்ளும் வகையிலான ஒரு மயக்க மருந்தும், சாதாரண அனஸ்தீஷியா, அதே போல் வாயு அனஸ்தீஷியா ஆகியவை கரப்பான்பூச்சிக்குக் கொடுக்கப்பட்டது.

இதன் பின் அக்கரப்பானின் உடலிலிருந்து முட்டை பையை ஆப்பரேஷன் மூலம் மருத்துவர் எடுத்தாட். ஆப்பரேசன் நல்ல வெற்றி பெற்றதன் காரணமாக கரப்பான் உயிர் பிழைத்தது. தென் அமெரிக்க காடுகளில் இந்த வகையிலான அறிய வகை கரப்பான் காணப்படுகின்றன.இந்தப் பூச்சியானது தனது வாழ்நாளில் 8 செ.மீ நீளத்துக்கு மிகமால் வளருமாம்.

கரப்பானின் வளர்ப்பாளர் உரிய நேரத்தில் அதனை மருத்துவமனைக்குக் கொண்டுவராமல் போனால் அது தொற்றுவியாதியை ஏற்படுத்தி  உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தியிருக்கலாம் என்று  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

author avatar
kavitha