முருங்கை கீரையில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள் இதோ!

முருங்கைக்கீரை பொதுவாக அனைவர் வீட்டிலும் இருப்பதால், அதை சாதாரணமாகத்தான் கருதுகிறோம்.  நமக்கு முருங்கைக்கீரை எளிதில் கிடைப்பதால் அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் தெரிவதில்லை. ஆனால் முருங்கைக் கீரை மற்றும் காயில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

முருங்கைக் கீரையின் மருத்துவ பயன்கள்

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்தால் உடல் சூடு தணிந்து மலச்சிக்கல் நீங்கும். முருங்கைக்கீரை மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் கை கால் உடம்பு வலிகள் நீங்கும். நாம் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் மாத்திரைகளில் இல்லாத சத்துக்கள் முருங்கைக்கீரையில் உள்ளது. அதிகப்படியான இரும்பு சத்துகளை கொண்டுள்ளதால், இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.

 

பற்களின் உறுதி, நீளமான முடி வளர, நரை முடி மறைய, தோல் நோய், வயிற்று புண், வாய்ப்புண் மற்றும் தலைவலி என அனைத்து நோய்களுக்குமே முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. அதுபோல நிறைமாத கர்ப்பிணியாக உள்ளவர்கள் முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிக அளவு சுரக்கும். அதுமட்டுமல்லாமல் ஆண் பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற முருங்கைக் கீரையை வேக வைத்து சாப்பிட்டால் போதும். 

முருங்கைக்காயின் மருத்துவ பயன்கள்

முருங்கை காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. இதை தொடர்ந்து சாப்பிடும் பொழுது ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தமடைகிறது. காய்ச்சல் மூட்டு வலி ஆகியவற்றிற்கு முருங்கைக்காய் சூப் மிகவும் நல்லது. அது மட்டுமல்லாமல், கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிக்கும் திறனை ஊக்குவிப்பதற்கும்,  பிரசவத்தை துரிதப்படுத்தவும் இந்த முருங்கைக்காய் மிகவும் உதவுகிறது

author avatar
Rebekal